Monday, December 6, 2010

முதல் முதலாய்..

முதல் முதலாய்..

முதலில் திருமணம் என்றதும் வெட்கப்பட்டது
முதல் கருவை ஏந்தியதும் பூரிப்படைந்தது
முதல் சிசுவை பார்த்ததும் ஆனந்தப்பட்டது..

முதல் பள்ளிக்கு அனுப்பும் போது
முதல் பிரிவால் சற்று கலங்கியது
முதல் வகுப்பென்றதும் கொண்டாடியது..

முதல் கல்லூரிக்கு அனுப்பிவிட்டு
முதல் முதலாக வெறுமையை உணர்ந்தது
முதல் சம்பளத்தில் புடவை வாங்கி கொடுத்தது..

முதலில் பெண் கேட்டதும்
முதல் முறையே வரன் அமைந்ததும்
முதல் முறை புகுந்தவீடு அனுப்பிவிட்டு..

முதல் முறையாக மனம் வெடித்து அழும்போதுதான்
முதன் முறையாக தோன்றியது
என்தாயும் இப்படித்தான் அழுதிருப்பாலோ...

No comments:

Post a Comment