மனதோடு சொல்கிறேன்
எத்தனை காலம் நீ என்னிடம் கேட்டாய்..
என் மனதோடு சொல்கிறேன்.. உனக்கே
என் மனதைக்கொடுத்துவிட்டேன் என்று..
இதயத்தோடு சொல்கிறேன்
உன்னில் பாதியாகிறேன் என்று..
கண்கள் உயிர் சாட்சியாக
காலம் சாட்சியாக ..
உயிர் என்னும் உள்ளத்தில் உன் பிம்பம்தான்
எழுதுகின்ற கவிதையில் எழுத்தும் நீயே..
காலையும் மாலையும் உன்னையே காண்கிறேன்
என் இதயக்கூட்டுக்குள் இருந்து சொல்கிறேன்..
உன் கை மீது கை கோர்த்துச்சொல்கிறேன்
நீயே என் வாழ்கை..
ஆயிரம்கோடி ஆசைகளுடன் உன்னிடம்
என் இதயத்தைச்சொல்ல ஓடோடி வருகிறேன்..
உன்னைக்கண்டேன் மண மேடையில்
இன்னொருத்தியின் கணவனாக ...
இவ்வளவுதான் என்மேல் உனக்கு காதலா...

No comments:
Post a Comment