Wednesday, December 22, 2010

என் இனியவளே

என் இனியவளே
 
உன்னைக்காணாமல் ஏங்கும் விழிகளுக்கு
உறக்கமாக.. நீ எப்போது வருவாய்

உன் பெயர் சொல்லும் இதழுக்கு
முத்தமாக.. நீ எப்போது வருவாய்

உன் நினைவால் வாடும் மனதிற்கு
சாமரமாக.. நீ எப்போது வருவாய்

உன் மூச்சுக்காற்றை சுவாசிக்க
என் அருகில்.. நீ எப்போது வருவாய்

உன் கூந்தல் மலரும் என்னை
கேலி பேசாமல்.. நீ எப்போது வருவாய்

உன் கால் கொலுசும் என்னைக்கண்டு
ஒலியாமல்.. நீ எப்போது வருவாய்

உன் சிங்காரச் சிரிப்பும் என் காதோரம்
ஒலிக்க.. நீ எப்போது வருவாய்

உன் அணைப்பில் என்னை மறக்க
என்னுள்.. நீ எப்போது வருவாய்

உன் நினைவால் வாடுவது நானல்ல
என்னுள் இருக்கும் நீ தான்..

இனியும் என்னை  வாட்டாதே
என் இனியவளே.. வந்துவிடு என்னிடம்..

Sunday, December 12, 2010

கனவு



கனவு

உன்னுடன் பேசிய சில மணித்துளிகள்
என் வாழ்வின் பொக்கிஷமாகும் ..

அதிகாலை கனவின் விழித்தெழல்
அழகான பணிதுளிக்கனவாக ..

என் வாழ்நாளெல்லாம் என் நினைவில்
கனவு ஒரு முறை தானே வரும்

அதன் தாக்கம் நினைவில் எப்போதும்
மௌன சாட்சியாய் மனசாட்சி..

ஏன் அழுகிறாய் கண்களே..

மனதின் வலி கண்களால்..
தாங்க முடியவில்லையா ..

தாங்கும் சக்தி மனதிற்கு இல்லையா...

ஆறாத புண்ணுக்கு மருந்தானாயா கண்ணீரே..
நினைவுகள் மடிவதெப்போது..

கண்ணீர் வற்றும் போதா..
இதயம் நிற்கும் போதா..

Tuesday, December 7, 2010

மழைக்கரங்கள்

மழைக்கரங்கள்

எப்படிச்சொல்வது என்னவென்று சொல்வது
வர வர உன் குறும்பு அதிகமாகிடுச்சி..

என் உடலும் அதிகம் நடுங்குது 
நீ  ரொம்ப நெளிய வைக்கிறாய் என்னை ..

அதிகமாக  என்னை நெருங்கி விட்டாய்
இருக்கட்டும் உன்னிடமிருந்து தப்பிக்க..

நாளை முதல் குடை பிடித்துக்கொண்டால்
உன் மழைக்கரங்கள் என்னை தீண்டாதல்லவா ... 

Monday, December 6, 2010

அமைதி

அமைதி


காலம் ஒரு நாள் மாறும்
காத்திருப்பும் மாறும்
கவிதை தேயும்..

கலங்கிய நெஞ்சும்
துடித்த மனதும்..
கண்ணீர் வற்றிய கண்களும்

ஒரு நாள் அமைதி கொள்ளும்
அப்போது என் நெஞ்சமும்
அமைதி கொள்ளும்

அதுவரை
மீளாத்துயர் கொள்வேன்
உன் நினைவுகளுடன்..

ஏனடி தோழி

ஏனடி தோழி

உனக்குள் என்னை விதைத்தாய் தோழி
உன்னால் தானே நான் உயிர் வாழ்கிறேன் என்றாய் ..

உன்னை விட்டு பிரிந்தால் என் உயிரும் இல்லை என்றாய்
உனக்கு பிடித்த அத்தனையும் எனக்கும் பிடிக்கும் என்றாயே ..

உனக்குள் நான் உருகுகிறேன் என்றாயே
உனக்கென்று காதலன் வந்ததும் ..

உன்னால் எப்படியடி என்னை மறக்க முடிந்தது
உன்னை விட்டு பிரிந்தாலும் என் நேசம் மாறாதடி தோழி

முதல் முதலாய்..

முதல் முதலாய்..

முதலில் திருமணம் என்றதும் வெட்கப்பட்டது
முதல் கருவை ஏந்தியதும் பூரிப்படைந்தது
முதல் சிசுவை பார்த்ததும் ஆனந்தப்பட்டது..

முதல் பள்ளிக்கு அனுப்பும் போது
முதல் பிரிவால் சற்று கலங்கியது
முதல் வகுப்பென்றதும் கொண்டாடியது..

முதல் கல்லூரிக்கு அனுப்பிவிட்டு
முதல் முதலாக வெறுமையை உணர்ந்தது
முதல் சம்பளத்தில் புடவை வாங்கி கொடுத்தது..

முதலில் பெண் கேட்டதும்
முதல் முறையே வரன் அமைந்ததும்
முதல் முறை புகுந்தவீடு அனுப்பிவிட்டு..

முதல் முறையாக மனம் வெடித்து அழும்போதுதான்
முதன் முறையாக தோன்றியது
என்தாயும் இப்படித்தான் அழுதிருப்பாலோ...

அலை கடல்

அலை கடல்

மின்னலாய் நீ வருவதும் போவதும்
என்னதான் உன் கதை ..ஏன் இப்படி..

உன்னை எத்தனை முறை பாத்தாலும்
பார்த்துக்கொண்டே இருக்க தோன்றுதே ..

உன் இதமான காற்றின் குளுமை
என் உள்ளம் துடிப்பது உனக்கு ..
நன்றாகவே தெரியும் ..இருந்தும்

இந்த கண்ணாமூச்சிதான் புரியவில்லை..
உன்னைத்தானே நான் கேட்கிறேன்
அலையே ஒரு நிமிடம் ஓரிடத்தில் நில்லேன் ..

குளிர் பேச்சு

குளிர் பேச்சு

கருமேகம் மறைந்து காற்றுப்போக்கில்
மழை பொழிந்துவிட்டு போவதுபோல்
நீ சென்ற பின்னரும் உன் குளிர் பேச்சு
என்னை மெய் சிலிர்க்க வைக்கிறதே
இதென்ன மாயம் ..

உன் நினைவாகவே இருக்க
நீ என்ன மாயம் செய்தாய்
உன் பேச்சு திறமையா
அல்லது உன் இதழ் முத்தமா .
இதென்ன மயக்கம் ..

பொழுது விடிவதே உனக்காக தானோ
ஏன் இவ்வளவு சந்தோசம்
இப்போதெல்லாம் நானும் அழகாகிவிட்டேன்
என் மனம் பாட்டெல்லாம் பாடுகிறது
இதென்ன மாற்றம்..

டேய் எந்த்ரிடா இன்னும் என்ன தூக்கம்
அம்மாவின் குரல் ..ஓ எல்லாம் கனவா
மீண்டும் கண்ணை மூடுகிறேன்
என்னவள் திரும்ப வருவாள் என்று
ஏனிந்த மாயம் ...

நான் கொண்ட காதல்

நான் கொண்ட காதல்

சின்ன சின்ன சிந்தனை
உன்னை நினைத்து..


நீ வருவதும் இல்லை
நான் உன்னை தேடுவதும் இல்லை...


ஒவ்வொரு நாளும் இருகும் என் மனதை
இன்னும் காயப்படுத்த முடியாது..

காதலுக்கும் காமத்திற்கும்
சிறு வித்தியாசம்தான்..

உணர்வுப்பூர்வமானது  காதல்
வெறும் உடல் இச்சை காமம்...

நீ கொண்டது எதுவோ நானறியேன் ..
நான் கொண்ட காதல் நானே அறிவேன் ... 

காத்திருத்தல்

காத்திருத்தல்

காத்திருத்தல் ஒரு சுகமான வலியாகும்
உனக்காக நான் காத்திருக்கிறேன்
ஆம் நீ.. மாறி வருவாய் என்று..

அதுவரை நான் உன்னுடன் பேச விழைய மாட்டேன்
உன்னை பார்க்கவும் மாட்டேன்..

உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது
நீ குழந்தை மனம் படைத்தவன் என்று..

நீயும் மாறுவாய் எனக்காக ஒரு நாள்
அந்த நாளே என் வாழ்வின் வசந்தமாகும்..

எப்படி திரும்பிப்போவேன்

எப்படி திரும்பிப்போவேன்

நடந்து நடந்து கால்கள் ஓய்ந்து விட்டன ..
மெதுவாக நின்று திரும்பிப்பார்க்கிறேன் ..

வெகுதூரம் வந்துவிட்டேனென்று..
நடக்கவே தெரியாத நான் ..

உன் கரம் பிடித்ததில் ..
எப்படி வந்தேன் இவ்வளவு தூரம் ..

கண்கள் இருட்டுகிறதே ஏன் .
நான் மட்டும் ஏனிங்கு தனியாக ..

எப்படி திரும்பி போவது .

ஐயோ என் கண்களில்...
கண்ணீரும் வற்றிவிட்டதே..

எப்படி திரும்பிப்போவேன் ..

அம்மா

அம்மா

எதற்கு இந்த சிரிப்பு..
எதற்கு இந்த முறைப்பு....

உன் கண் ஜாடை எனக்கா புரியாது
தேவை இல்லாமல் எதற்கு இத்தனை
புகழ்ச்சி ..

உன்னைப்பற்றி முழுமையாக நானறிவேன்
என்னிடமே எதற்க்கு இத்தனை ஜாலக்கு...

நண்பர்களுடன் சுற்ற பணம் வேண்டும்
அப்பாவிடம் பரிந்துரை இதற்குத்தானே ....

தோழமை

தோழமை

இத்தனை நேரம் சூடாகிப்போன
மனமும் உடலும் மழைச்சாரலின்
இதமான காற்றுடன் கலந்த தூரலில்
குளிர்ந்தது தேகம்...

மனதிலோ சாரலின் சந்தோசம்
இன்னும் சற்று நேரம் இயற்கையின்
மடியிலேயே இருக்க உள்ளம் துடிக்கிறது ..

நிதானமாக நடந்தவைகளை யோசிக்கிறது மனம் ..

ஏன்..? ஏன் இப்படி செய்தாய் ..
நான் உனக்கு என்ன தவறு செய்தேன்
கல்லூரி காலங்களில் ஒன்றாக
சேர்ந்து சுற்றியதை மறந்துவிட்டாயா..

பேசியது ஒன்று கூடவா
உன் நினைவில் இல்லை
நானாக பேசியதை விட..
நீயாக பேசியதுதானே அதிகம்

நானின்றி நீ இல்லை...
நீயன்றி நான் இல்லவே இல்லை என்றாயே.
பார்த்தவர்கள் எல்லாம்..
இது அருமையான ஜோடிபுறா என்றார்களே

நம் இரு வீட்டிலும் கூட..
நமக்கு எந்த தடையும் இல்லையே
உடுத்தும் உடை கூட ஒரே மாதிரி தானே ..
தோழிகளுக்கு உதாரணமாக இருந்த நாம்..

ஏனடி என்னிடம் சொல்லாமலே மணமுடித்து போனாய் ..
என் உள்ளம் துடிப்பது உனக்கு புரியவில்லையா...

ஊடல்

ஊடல்

ஊடல் சில நேரம்
கூடல் பல நேரம்
காட்சிகள் பல ஆயினும்
பார்வைகள் ஒன்றுதானே
இணைந்த மணங்கள் பிரயுமோ
பிரிந்த மணங்கள் கூடுமோ ..

சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகத்தான் எடை போடுமே ..
அதன் காரணம் உள்ளங்கள்தான் சேராததே ..
இழப்பென்பது நமக்குள் நாமே
நம்மை இழப்பதன்றோ ..

கொஞ்சம் கொழுப்பும் திமிரும்
எனக்கும் இருக்கு அன்பு தோழா
நெஞ்சம் முழுக்க உன்னை சுமந்த
கொழுப்பும் திமிரும்தான் அது....

உணர்ந்து நிமிர்ந்தால் வெகுதூரம்
நான் தனித்து விடப்பட்டது ..
என்னால் தவிப்பும் ....????

உன்னை முழுதாக நிச்சயம் நானறிவேன்
இத்தனை விளக்கமும் ஏன்..
சொல்ல தெரியவில்லை ..
என்னுடன் பேசவேண்டுமென்றோ.
என்னை பார்க்க வேண்டுமென்றோ
கண்டிப்பாக அல்ல ..

நான் இதுவரை உன்னை விட்டு பிரிந்ததே இல்லை .
இனியும் அப்படிதான் ..ஆனால் இனி
என் நினைவுகள் மட்டுமே ..
உன்னை சேரும் ..

என்றாவது ஒரு நாள்
என் தாக்கமும் உன்னை சேர்ந்தால்
உனக்காக நான் காத்திருப்பேன் ..
என் உள்ளம் உனக்கு தெரியும்..

உன் இதயம் கல்லென்று நீ சொன்னாலும்
அது குழந்தையென்று நானறிவேன் ..

பேசுகிறேன் நான் உன் இதயத்துடன்
புயலடித்தாலும் நான் பூக்கள் வீசுவேன்
முற்றுபுல்லிக்கு அருகில்
சின்ன புள்ளிகள் வைத்தால்
அது தொடருமல்லவா...

நம் உறவும் அதுபோலதான்
நாம் எவ்வளவு தான் சண்டை
போட்டாலும் இருவர் மனதிலும்
ஒருவரை ஒருவர் அழித்துவிட
கட்டாயம் முடியாது ....

மனதோடு சொல்கிறேன்

மனதோடு சொல்கிறேன்

எத்தனை காலம் நீ என்னிடம் கேட்டாய்..
 
என் மனதோடு சொல்கிறேன்.. உனக்கே
என் மனதைக்கொடுத்துவிட்டேன் என்று..

இதயத்தோடு சொல்கிறேன்
உன்னில் பாதியாகிறேன் என்று..

கண்கள் உயிர் சாட்சியாக
காலம் சாட்சியாக ..

உயிர் என்னும் உள்ளத்தில் உன் பிம்பம்தான்
எழுதுகின்ற கவிதையில் எழுத்தும் நீயே..

காலையும் மாலையும் உன்னையே  காண்கிறேன்
என் இதயக்கூட்டுக்குள்  இருந்து சொல்கிறேன்..

உன் கை மீது கை கோர்த்துச்சொல்கிறேன்
நீயே என் வாழ்கை..

ஆயிரம்கோடி ஆசைகளுடன் உன்னிடம்
என் இதயத்தைச்சொல்ல ஓடோடி வருகிறேன்..

உன்னைக்கண்டேன்  மண மேடையில்
இன்னொருத்தியின் கணவனாக ... 

இவ்வளவுதான் என்மேல் உனக்கு காதலா... 

Thursday, December 2, 2010

உயிரானவன்

உயிரானவன்

பேசாத எனக்கு வார்தையானவன் நீ
எழுதாத எனக்கு கவிதையானவன் நீ..

இனிப்பான மொழிகளுள் தமிழானவன் நீ
என் உள்ளம் கவர்ந்ததால் கள்வனானவன் நீ..

என் நன்மை தீமை உரைப்பதால் நண்பனும் நீ
என் சந்தேகங்களை தீர்ப்பதால் என் ஆசானும் நீ..

என் பசி தாகம் அறிவதால் என் தாயுமானவன் நீ
மௌனமான என் வாழ்கையில் வசந்தமானவன் நீ..

மொத்தத்தில் என் உயிரானவன் நீ....

Wednesday, December 1, 2010

குருவிக்கூடு

குருவிக்கூடு

நெஞ்சமெனும் கூட்டிலே
உன்னைவைத்தேன்
கண்ணிலே சிறை வைத்தேன்
எனக்கே எனக்கென்று நீ..
உனக்கே உனக்கென்று  நான்..

தென்றலான  நம் வாழ்க்கை
அழகான குருவிக்கூடு போன்றது
நமக்கென்ற நம் குழந்தைகள்..
நாம் பெற்ற அழகான வசந்தங்கள்
நன்றி நம் பெற்றோருக்கே...

பாசம்

பாசம்

ஏய் ஓடாத நில்லு...
எங்காவது கால் தடுக்கபோகுது ..

கொஞ்சம் சும்மா இருங்களேன்..
எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்க..

பார்த்தா பார்க்கட்டும்.....

நான்தான் உன் கதாநாயகன்னு
எல்லாருக்கும் தெரியும்....

ஒரு சிறு அணைப்பு
ஒரு இதழ் பதிப்பு...

இன்னும் கல்யாணத்திற்கு
பத்து நாள்தான் இருக்கு ..

எவ்வளவு வேலை இருக்கு
இப்படி தொல்ல பன்றிங்கலே ..

பேரன் பேத்தி எல்லாம் ..
கிண்டல் பன்றாங்க ..

பாட்டி தாத்தா ஏன் உன் பின்னாலேயே
சுத்துரார்னு கேட்கிறாங்க ..

ம்ம்.. ..

வாழ்க்கை

வாழ்க்கை

என் மீது உன் கோபம் தான் என்ன
உடை அழகு என்றேன்.....

என் அம்மா தேர்வு என்றாய்...

இத்தனை நளினம் உன்னிடம் தான்
நான் காண்கிறேன் என்றேன்...

அது என் அம்மாவால் வந்தது என்றாய்...

இத்தனை சிக்கனம் உன்னிடம்தான் என்றேன்
அது என் அம்மாவிடம் கற்றது என்றாய்...

எப்படி உன்னால் எல்லாம் சரியாக பேசமுடிகிறது என்றேன்
என் அப்பாவை பார்த்து நான் கற்றது என்றாய்..

நீ செய்யும் ஒவ்வொரு செயலுக்கும்
அப்பா அம்மா காரணம் என்றாய்..

இத்தனை செய்த அவர்கள் உன் வாழ்க்கை
துணையை சரியாகத்தானே தேர்வு செய்வார்கள் என்றேன் ..

நீயோ காதல் என்று சொல்லி என்னிடம்
கோபப்படுவதேன் ....

உன்னை செதுக்கிய அவர்கள்
உன் வாழ்கையை தெரிவு செய்ய மாட்டார்களா ..