Tuesday, November 30, 2010

குட்டி குழந்தை

குட்டி குழந்தை

பையன் பிறந்திருக்கான் கேட்ட அந்த நொடி
தரையே காலடியில் இருந்து நழுவுவது போல
வானத்தில் இறக்கை கட்டி பறப்பது போல ..

அப்பப்பா என்ன உணர்வுடா இது..
குழந்தையின் அழுகை கூட
இனிய சங்கீதம் போல உள்ளதே ..

குட்டி குட்டியாய் கை கால்கள்
சொப்பு வாய்.. சிவந்த இதழ்..
இன்னும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல ..

குட்டி குழந்தையை தனியே விட்டு
ஒரு நொடி கூட பிரிய மனமில்லையே
எவ்வளவு அழாகாக சிரிக்கிறான் ..

என்னவள் தாய்மையின் பூரிப்பில் இன்னும்
தேவதை போல இருக்கிறாள்..

நாளை பெயர் சூட்டு விழா
வந்த அத்தனை பேரும் பொம்ம மாதிரி
இருக்கான்பா உங்க பையன் ..

பூரிப்பில் நாங்கள் இருவரும் ...

ஒரு குழந்தையே போதும்...
அவனை நன்கு வளர்க்க வேண்டும்
எங்கள் இருவரின் ஒருமித்த கருத்து..

ஒவ்வொரு நாளும் விடிவதே
எங்கள் செல்லத்துக்காகத்தான்..
எங்கள் வாழ்கையே ஆனந்தமாக்கிவிட்டான் ..

இப்போதான் முதல் பிறந்த நாள்
கொண்டாடியது போல இருக்கு
அதுக்குள்ளே ஸ்கூல் சேர்த்தாச்சு..

மீண்டும் பாடங்கள் நாங்களும் படிக்க ஆரம்பித்து
அப்பாடா என்று நிமிர்ந்தால் கல்லூரி படிப்பை
முடித்து வேலைக்கு சேர்ந்துவிட்டேன் என்கிறான் ..

நல்ல இடமாக பார்த்து மனமுடிதாயிற்று
இதோ பேரப்பிள்ளையும் பிறந்துவிட்டான்
ஏதோ மிகப்பெரும் சாதனை புரிந்த பூரிப்பு எங்களுக்குள்..

தாத்தா பாட்டி நாளைக்கு உங்க ரெண்டு
பேரையும் எங்கேயோ ஹோம்ல
சேர்க்க போறாங்களாம்...

No comments:

Post a Comment