பெயர் பொருத்தம்
பெயர் பொருத்தம் என்பது இது தானோ
உன் பெயரைப் போலவே உனக்குள்தான்
எத்தனை இனிமை எத்தனை புதுமை..
நீ சிந்திப்பதெல்லாம் நல்லவையே
உதவிக்கரம் என்பதும் உன்கரமன்றோ..
அனைத்து குடும்பங்களும் சிறப்பாக வாழ
அவர்தம் மனங்களை செதுக்கும் சிற்பியன்றோ நீ..
உனக்குள் எத்தனை சிந்தனைகள்
அத்தனையும் முத்துக்களன்றோ..
நடை முறை விளக்கங்களும்
அதன் பாகுபாட்டையும் அதற்க்கு
நீ தரும் விளக்கமும் எல்லாமே
பொக்கிஷமாக போற்றபடக்கூடியவை ..
ம்..நீ தான் இப்படி என்றால்
உன் துணையோ உனக்கேற்ற ஜோடிதான்..
நீல வானின் வெள்ளி நிலவைபோன்றவள்
உன் பெயரை போலவே அவள் பெயரும்
உன் பெயருக்கேற்ற பொருத்தம் ..
அவளுக்குக்கேற்ற பெயர்.. எப்படி இந்த
இரண்டு பெயர்களும் இத்தனை அழகு..
காணும் பார்வையில் கருணை மிக்கவள்
பேசும் பேச்சிலோ இனிமையை தவிர
வேறறியாதவள்..சிரிப்பின் அழகவள்..
உன் சொல்லன்றி வேறு அறியாதவள்
தேவாரம் படித்து அதன் இனிமையில்
இறைவழி உன் துணையுடன் நடப்பவள்..
உங்கள் வழி நடந்தாலே இல்லறமும் நல்லரமன்றோ
வணங்குகிறேன் உங்கள் பொற்பாதங்களை..

No comments:
Post a Comment