Tuesday, November 30, 2010

மழலை

மழலை

உன்னை பார்த்துக்கொண்டே இருக்க
என் மனம் துடிக்கிறதே ..
நீதான் எத்தனை அழகு

உன் துருதுரு பார்வை
அதில் தீட்டிய மை
நீ கண்ணுருட்டி பார்க்கும் பார்வை

உன் சின்ன கால்களின் கொலுசு
உன் மணியோசை சிரிப்பு
என் மனதை கொள்ளை கொள்கிறது

உன் செம்பவள வாய் திறந்து
நீ பேசும் மழலை ..எத்தனை தித்திக்கிறது

உன்னை அள்ளி அணைக்க
என் தாயுள்ளம் ஏங்குகிறது..

சுட்டிப்பெண்ணே நீ என்
கட்டி தங்கமல்லவா ..

உன் பிஞ்சு கரங்களால்
நீ எனை தீண்டும் போது
உலகையே மறக்கிரேனடி நான் ...

காதல்

காதல்

உன் இதழ் ஓர சிரிப்பு
என் உள்ளத்தின் சிலிர்ப்பு
என் நெஞ்சம் பறக்கிறது
நீ அருகினில் வந்தாலோ
என்னுள் ஏன் தான் இந்த
பயமோ ..
இதென்ன இத்தனை
உணர்சிக்கலவை ..
ஒ ..
இதுதான் காதலா....
ஒரு நாளைக்குள் இத்தனை கனவா
உன்னையன்றி வேறு எதையும்
நினைக்கவே தோன்றவில்லையே ..
என் நடை உடை அத்தனையும்
ஒரு நாளில் மாற்றி விட்டாயே
உன்னைப்பார்க்கவே விடிகிறதோ
பார்த்தால் நாணம் மிகுதியாகிறது
பார்க்கவிட்டால் ஏக்கம் மிகுதியாகிறது
எப்போதும் பறப்பது போலவே ...ம்..

நன்றி

நன்றி

ஐ லவ் யு ..
திரும்ப திரும்ப காதுகளில்
ஒலித்துக்கொண்டே இருந்தன
தாங்க முடியவில்லை இது
ஏன் என் கண்ணீரில் குளிக்க
அத்தனை ஆசைப்படுகிறாய்
வந்தவரெல்லாம் தோஷ
ஜாதகம் என்று ஓட
நீ மட்டும் ஏன் இப்படி
என்னை விரும்பும் உன்னை
நான் எப்படி ஏற்ப்பேன்
நீ எங்கிருந்தாலும் வாழ்க ..

யாதுமாகி நின்றவன்

 யாதுமாகி நின்றவன்

என் மனதில் ஒரு வெறுமை
நீ பேசியும் சந்தோஷிக்கவில்லை மனது..

ஏன்தான் பிறந்தோம் என்று எத்தனையோ நாட்கள்
உணக்காகவே பிறந்ததாக சில நாட்கள்...

எல்லாம் மாயை என்று இப்போது..

என் நிலை உன் மனதில் என்ன
உன் ஒற்றை வார்த்தையில் புரிய வைத்தாய்...

இதுதான் என் நிலை என்று புரியவைத்தாய்
என் ஆயிரம் கோடி நன்றிகள் உனக்கு...

உன்னை புரிய வைத்தமைக்கு..

உணர்சிகளை கொல்வது எனக்கு புதிதல்ல
என் உணர்சிகளை கொல்ல முடியும்...

ஆனால் சாகும் வரை என் நினைவுகள் உன்னோடு
என்னை மறக்க உன்னால் எப்படி முடிந்தது ..

என்னை என் மனதை நன்கு புரிந்தவன் என்று நினைத்தேன்..

மறுபடி பிறந்தேன் உன்னால்
உடனே இறந்தேன் உன்னால்

என் யாதுமாகி நின்றவனன்றோ நீ....

குட்டி குழந்தை

குட்டி குழந்தை

பையன் பிறந்திருக்கான் கேட்ட அந்த நொடி
தரையே காலடியில் இருந்து நழுவுவது போல
வானத்தில் இறக்கை கட்டி பறப்பது போல ..

அப்பப்பா என்ன உணர்வுடா இது..
குழந்தையின் அழுகை கூட
இனிய சங்கீதம் போல உள்ளதே ..

குட்டி குட்டியாய் கை கால்கள்
சொப்பு வாய்.. சிவந்த இதழ்..
இன்னும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல ..

குட்டி குழந்தையை தனியே விட்டு
ஒரு நொடி கூட பிரிய மனமில்லையே
எவ்வளவு அழாகாக சிரிக்கிறான் ..

என்னவள் தாய்மையின் பூரிப்பில் இன்னும்
தேவதை போல இருக்கிறாள்..

நாளை பெயர் சூட்டு விழா
வந்த அத்தனை பேரும் பொம்ம மாதிரி
இருக்கான்பா உங்க பையன் ..

பூரிப்பில் நாங்கள் இருவரும் ...

ஒரு குழந்தையே போதும்...
அவனை நன்கு வளர்க்க வேண்டும்
எங்கள் இருவரின் ஒருமித்த கருத்து..

ஒவ்வொரு நாளும் விடிவதே
எங்கள் செல்லத்துக்காகத்தான்..
எங்கள் வாழ்கையே ஆனந்தமாக்கிவிட்டான் ..

இப்போதான் முதல் பிறந்த நாள்
கொண்டாடியது போல இருக்கு
அதுக்குள்ளே ஸ்கூல் சேர்த்தாச்சு..

மீண்டும் பாடங்கள் நாங்களும் படிக்க ஆரம்பித்து
அப்பாடா என்று நிமிர்ந்தால் கல்லூரி படிப்பை
முடித்து வேலைக்கு சேர்ந்துவிட்டேன் என்கிறான் ..

நல்ல இடமாக பார்த்து மனமுடிதாயிற்று
இதோ பேரப்பிள்ளையும் பிறந்துவிட்டான்
ஏதோ மிகப்பெரும் சாதனை புரிந்த பூரிப்பு எங்களுக்குள்..

தாத்தா பாட்டி நாளைக்கு உங்க ரெண்டு
பேரையும் எங்கேயோ ஹோம்ல
சேர்க்க போறாங்களாம்...

பெயர் பொருத்தம்

பெயர் பொருத்தம்

பெயர் பொருத்தம் என்பது இது தானோ
உன் பெயரைப் போலவே உனக்குள்தான்
எத்தனை இனிமை எத்தனை புதுமை..

நீ சிந்திப்பதெல்லாம் நல்லவையே
உதவிக்கரம் என்பதும் உன்கரமன்றோ..

அனைத்து குடும்பங்களும் சிறப்பாக வாழ
அவர்தம் மனங்களை செதுக்கும் சிற்பியன்றோ நீ..

உனக்குள் எத்தனை சிந்தனைகள்
அத்தனையும் முத்துக்களன்றோ..

நடை முறை விளக்கங்களும்
அதன் பாகுபாட்டையும் அதற்க்கு
நீ தரும் விளக்கமும் எல்லாமே
பொக்கிஷமாக போற்றபடக்கூடியவை ..

ம்..நீ தான் இப்படி என்றால்
உன் துணையோ உனக்கேற்ற ஜோடிதான்..

நீல வானின் வெள்ளி நிலவைபோன்றவள்
உன் பெயரை போலவே அவள் பெயரும்
உன் பெயருக்கேற்ற பொருத்தம் ..

அவளுக்குக்கேற்ற பெயர்.. எப்படி இந்த
இரண்டு பெயர்களும் இத்தனை அழகு..

காணும் பார்வையில் கருணை மிக்கவள்
பேசும் பேச்சிலோ இனிமையை தவிர
வேறறியாதவள்..சிரிப்பின் அழகவள்..

உன் சொல்லன்றி வேறு அறியாதவள்
தேவாரம் படித்து அதன் இனிமையில்
இறைவழி உன் துணையுடன் நடப்பவள்..

உங்கள் வழி நடந்தாலே இல்லறமும் நல்லரமன்றோ
வணங்குகிறேன் உங்கள் பொற்பாதங்களை..

நினைவலைகள்

நினைவலைகள்

என் நினைவலைகள் ஒரு நாள் உன்னைச்சேரும்
உன் நினைவாலே வாடுவது நானல்ல
என்னுள் இருக்கும் நீதான் ..

எங்கோ தூரத்தில் நீ இருந்தாலும்
உன் நினைவாலே என்னை
ஆட்டுவிப்பதும் ஏனோ...

உன்னை நினைத்தே உயிர் வாழ்கிறேன்
உன் நினைவாலே சுவாசிக்கிறேன்
உன் நினைவே என்னுள் எப்போதும்..

உன் நினைவலைகள் என்னை சேர்வதால் தான்
உன் நினைவாலே நானும் வாடுகிறேன்
உன் நினைவே என்னுயிரை தாங்குகிறது ..

தாலாட்டு

தாலாட்டு

 
மலை போன்ற சிந்தை கொண்ட
என் குழந்தையே ..

உன் கண்களும் வற்றிவிட்டது
நீயும் சற்று அமைதி பெரு..

நோய்களும் உன்னை கண்கொண்டு
புரமுதுகிட்டோடும் காலம் வரும் ..

அதுவரை நீயும் சற்றே உறங்கு
மனம் அமைதி பெற்று உறங்கு ..

உன் மன காயங்கள் ஆறவே
நானும் இறகு கொண்டு வீசுவேன் ..

சிந்தை கலங்கலாமோ நீ
சீரும் வீரமல்லவோ நீ

வெற்றி பெறவே பிறந்தவனல்லவா நீ
தமிழின் அமுதல்லவா நீ..

சற்றே கண்ணயர நானும் பாடுகிறேன்
தாலாட்டொன்றை கண்ணே நீ கண்ணுறங்கு ..
0

இதுதான் காதலோ

இதுதான் காதலோ

நானும் உயிர் பெற்றேன்
உன் குரல் கேட்டதுமே..

மலை போல் குவித்து வைத்த கோபம்
ஒரு நொடியில் போனதெங்கே ..

இதுதான் காதலோ ..

என்னதான் உன் குரல்.. உண்மை
குரலில் அல்ல என் காதலில் ..

Monday, November 29, 2010

மயக்கம்


மயக்கம்

என்னதான் நான் என்னை
மாற்றிக்கொள்ள நினைத்தாலும்
என் மனம் முழுக்க உன் நினைவுப்பூக்கள்..

உன்னுடன் பேசக்கூடாது என்று
என் உதடுகள் கட்டளையிடுகிறது
ஆனால் என் மனம் அதை ஏற்பதே இல்லை..

உன்னை பார்க்ககூடாது என்று
கண்களை மூடிக்கொள்கிறேன்
மூடிய கண்களில் உன்னுருவம்..

நான் காணும், நினைக்கும் அணைத்து
செயல்களிலும் உன்னையே காண்கிறேன்..

நீ என்னை பார்க்கும் போது
என் மனதில் ஏன் தான் இந்த தவிப்போ..

நீ சிரித்துவிட்டால் என்னை கட்டுபடுத்தவே
நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் ..

ஆனாலும் நீ ரொம்ப மோசம்
உன் துருதுரு பார்வையாலேயே
என்னை மயக்கி கட்டிப்போட்டுவிட்டாயே..

உன் அருகில் இருக்கும் போது
என்னையே நான் மறந்து போகிறேன்
என்ன மாயம் செய்தாயோ நீ..

Saturday, November 27, 2010

இதயத்தின் ஓசை


இதயத்தின் ஓசை

ஏன் இப்படி என்னுள்..
எதற்க்கு இந்த மாற்றம்..

இதயத்தின் ஓசை அடங்கும் முன்னர்
மாற்றம் மாறுமா இதயம் ஓலமிடுகிறது..

என் துடிப்பை நிறுத்திவிடு என்கிறது
மனமது மடிந்திட என்ன செய்ய வேண்டும்..

நினைவுகள் நீங்கினால் சித்தப்ரம்மை அன்றோ
நான் பைத்தியமாவதுதான் உன் விருப்பமா ..

நான் என்ற கர்வம் என்னுள் எங்கோ ஒளிந்துக்கொண்டது
ஒரு சிறு தும்மலுக்கு கூட பயப்படுகிறது மனது..

ஏமாற்றம் என்பது வாழ்கையில் சகஜம்
ஏமாற்றமே வாழ்கையானால் என் சொல்வது

இத்தனைக்கும் காரணம் மாறாத அன்புதான்
காதலுக்குதான் எத்தனை மகத்தான சக்தி..
..............................
.....
ஏன் இப்படி என்னுள்..
எதற்க்கு இந்த மாற்றம்..

இதயத்தின் ஓசை அடங்கும் முன்னர்
மாற்றம் மாறுமா இதயம் ஓலமிடுகிறது..

என் துடிப்பை நிறுத்திவிடு என்கிறது..
நான் இருக்கிறேன் என்கிறது நட்பு

நினைவுகள் நீங்கினால் சித்தப்ரம்மை அன்றோ
உன் நினைவுகளும் என்னை விட்டு நீங்காது

நான் என்ற கர்வம் என்னுள் எங்கோ ஒளிந்துக்கொண்டது
நட்புக்கு முன் அனைத்தும் சமம் என்று புரிகிறது

ஏமாற்றம் என்பது வாழ்கையில் சகஜம்
ஏமாற்றத்தை தடுப்பது நட்பன்றோ

இத்தனைக்கும் காரணம் மாறாத அன்புதான்
நட்புக்குத்தான் எத்தனை மகத்தான சக்தி..

Friday, November 26, 2010

சாரல் காற்று

சாரல் காற்று

சில்லென்ற காற்று என்னை தழுவும் போது
நானும் என்னை மறக்கிறேன் ..ம்..
எத்தனை சிலிர்ப்பு..

எங்கிருந்துதான் இந்த சாரல் காற்றோ
உனக்கு மட்டும் ஏன் இந்த குளிர்ச்சி
எதற்கும் கலங்க மாட்டாயோ ..

இருக்கட்டும் உன்னைவிட
என்னவரின் அணைப்பு மீண்டும் என் தாயின்
கருவறைக்குள் இருப்பது போல ..