Sunday, December 25, 2011
Thursday, December 22, 2011
மாற்றம்
மாற்றம்
என் அருகில் நீ இல்லாதது மிகவும் வெறுமை
ஏனிந்த மாற்றம் என்ன செய்தாய் நீ..
உன் கனிவான பேச்சு சிலையாகிபோகிறேன் நான்
உன் இதழ் அமுதம் இன்னும் இன்னும் ......
ஏனிந்த மாற்றம் உன் நினைவில் நான்
மனதில் மாற்றம் இதழில் சிரிப்பு
கண்களில் மயக்கம் காதலின் நினைவு
உன் நெஞ்சில் என் விடியல்...
உன் அணைப்பு மீண்டும் கருவறை
உன் நினைவு என்னை வாட்டுகிறது..
ஏனடி பெண்ணே நீ
என்னதான் செய்தாய் என்னை .......
என் அருகில் நீ இல்லாதது மிகவும் வெறுமை
ஏனிந்த மாற்றம் என்ன செய்தாய் நீ..
உன் கனிவான பேச்சு சிலையாகிபோகிறேன் நான்
உன் இதழ் அமுதம் இன்னும் இன்னும் ......
ஏனிந்த மாற்றம் உன் நினைவில் நான்
மனதில் மாற்றம் இதழில் சிரிப்பு
கண்களில் மயக்கம் காதலின் நினைவு
உன் நெஞ்சில் என் விடியல்...
உன் அணைப்பு மீண்டும் கருவறை
உன் நினைவு என்னை வாட்டுகிறது..
ஏனடி பெண்ணே நீ
என்னதான் செய்தாய் என்னை .......
Tuesday, December 13, 2011
அன்பின் அடைக்கலம்
அன்பின் அடைக்கலம்
அதிகாலை விழித்தெழல் உன் மார்பில்
கலைந்த என் கூந்தலை உன் கரங்களும்...
சற்றே ஒதுக்கிவிட ....
கண் இமை திறந்தால் நாணம் வரும் விலக நேரிடும் ..
அன்பே நான் கண் விழிக்க மாட்டேன்
பூ போன்ற பொக்கிசமான வாழ்க்கை
அதிகாரம் வேண்டாம் ஆணவம் வேண்டாம்
அன்பால் ஆட்சி செய்வோம் நமக்குள்
மாட மாளிகை வேண்டாம்... அரிதான நகைகள் வேண்டாம்
அறுசுவை விருந்தும் வேண்டாம்...
அன்பான உன் கரங்களின் தீண்டல் போதும்
கனிவான உன் பார்வை.... அது சொல்லும் நேசம் போதும்
உன் எண்ணம் என் செயலாக...உணதாளுகையின் கூட்டுக்குள் அடைக்கலமாக....
.
அதிகாலை விழித்தெழல் உன் மார்பில்
கலைந்த என் கூந்தலை உன் கரங்களும்...
சற்றே ஒதுக்கிவிட ....
கண் இமை திறந்தால் நாணம் வரும் விலக நேரிடும் ..
அன்பே நான் கண் விழிக்க மாட்டேன்
பூ போன்ற பொக்கிசமான வாழ்க்கை
அதிகாரம் வேண்டாம் ஆணவம் வேண்டாம்
அன்பால் ஆட்சி செய்வோம் நமக்குள்
மாட மாளிகை வேண்டாம்... அரிதான நகைகள் வேண்டாம்
அறுசுவை விருந்தும் வேண்டாம்...
அன்பான உன் கரங்களின் தீண்டல் போதும்
கனிவான உன் பார்வை.... அது சொல்லும் நேசம் போதும்
உன் எண்ணம் என் செயலாக...உணதாளுகையின் கூட்டுக்குள் அடைக்கலமாக....
.
Thursday, September 29, 2011
எனக்கானவன் நீ
எனக்கானவன் நீ
வாசமான பூங்காற்று நீ
உன் அணைப்பில் எப்போதும் நான் துயில் கொள்கிறேன்..
வசந்தமான நினைவுகள் நீ
உன் நினைவில் எப்போதும் நான் எனை மறக்கிறேன் ..
மாசற்ற பேச்சாளன் நீ
உன் பேச்சின் அழகில் எப்போதும் நான் வழிநடக்கிறேன்..
கம்பீரமான அழகு நீ
உன் அழகின் மயக்கம் எபோதும் நான் உன் மயக்கத்தில்...
தீட்சண்யமான பார்வை நீ
உன் பார்வையின் கூர்மையில் நாணி தலைகுனிகிறேன்..
எனக்கானவன் நீ
இந்த நினைவு என்னை கவியாக்குகிறது...
வாசமான பூங்காற்று நீ
உன் அணைப்பில் எப்போதும் நான் துயில் கொள்கிறேன்..
வசந்தமான நினைவுகள் நீ
உன் நினைவில் எப்போதும் நான் எனை மறக்கிறேன் ..
மாசற்ற பேச்சாளன் நீ
உன் பேச்சின் அழகில் எப்போதும் நான் வழிநடக்கிறேன்..
கம்பீரமான அழகு நீ
உன் அழகின் மயக்கம் எபோதும் நான் உன் மயக்கத்தில்...
தீட்சண்யமான பார்வை நீ
உன் பார்வையின் கூர்மையில் நாணி தலைகுனிகிறேன்..
எனக்கானவன் நீ
இந்த நினைவு என்னை கவியாக்குகிறது...
குட்டி தேவதை
குட்டி தேவதை
அழகு நிலா உற்சவத்தில் சிறிய நட்சத்திரகூட்டம்
அழகு நிலா உற்சவத்தில் சிறிய நட்சத்திரகூட்டம்
வானமெங்கும் சிதறிய நட்சத்திர தோரணம்..
வெண் மேகத்தின் சந்தோசச்சாரல்கள்
எதற்காக இத்தனை கொண்டாட்டம்...
அனைவரும் வியந்து பார்க்க
வானத்தில் நடந்தது ஓர் அதிசய நிகழ்வு..
முழு நிலவின் ஒளி உலகெங்கும் வியாபிக்க
புதிதாக பிறந்த குட்டி குழந்தையின் சிரிப்பு..
தன் மெல்லிய சிணுங்களில் சின்ன கைகளை அசைத்து
கால்களை உதைத்து தன் செப்பு வாய் சிரிப்பால்...
மயக்கும் தேவதையின் சாயலுடன் என்
பவித்ரமானவளின் குழந்தையன்றோ அது!!!!!
தன் மெல்லிய சிணுங்களில் சின்ன கைகளை அசைத்து
கால்களை உதைத்து தன் செப்பு வாய் சிரிப்பால்...
மயக்கும் தேவதையின் சாயலுடன் என்
பவித்ரமானவளின் குழந்தையன்றோ அது!!!!!
Sunday, September 25, 2011
கனவின் எதிரொலி
கனவின் எதிரொலி
சுகமான நித்திரை அதில் வரும் கனவு
விடிந்தால் மடிந்துவிடும் ..
நிச்சலனமான சிந்தனை அதில் வரும் நினைவுகள்
கண்ணெதிரே தோன்றும் காட்சிகள்
அத்தனையும் மாயையோ ..
மேகம் திரண்டு வரும்போது போடும் தூறல்
சற்று நேர மகிழ்ச்சிதானே ..
மழை மேகங்களே எனக்காக மறுபடி வாருங்கள்
காத்திருப்பு தேயும் போது காலங்கள் மாறும்
ஆனால் எப்போதும் மாறாதது
மனதில் தோன்றும் அன்புக்காதல்
கடமை அனைவருக்கும் உண்டு
அதனுடன் வாழ்வது வாழ்க்கை ..
கடல் அலை ஓய்ந்த பின் குளிக்க நினைப்பது
எப்படி சாத்தியமாகும் ..
வாழும் காலமோ சிறிது
அதனை முழுமையாக வாழவேண்டும்...
சுகமான நித்திரை அதில் வரும் கனவு
கனவை கலையாமல் அரங்கேற்றுவோம் ..
சுகமான நித்திரை அதில் வரும் கனவு
விடிந்தால் மடிந்துவிடும் ..
நிச்சலனமான சிந்தனை அதில் வரும் நினைவுகள்
கண்ணெதிரே தோன்றும் காட்சிகள்
அத்தனையும் மாயையோ ..
மேகம் திரண்டு வரும்போது போடும் தூறல்
சற்று நேர மகிழ்ச்சிதானே ..
மழை மேகங்களே எனக்காக மறுபடி வாருங்கள்
காத்திருப்பு தேயும் போது காலங்கள் மாறும்
ஆனால் எப்போதும் மாறாதது
மனதில் தோன்றும் அன்புக்காதல்
கடமை அனைவருக்கும் உண்டு
அதனுடன் வாழ்வது வாழ்க்கை ..
கடல் அலை ஓய்ந்த பின் குளிக்க நினைப்பது
எப்படி சாத்தியமாகும் ..
வாழும் காலமோ சிறிது
அதனை முழுமையாக வாழவேண்டும்...
சுகமான நித்திரை அதில் வரும் கனவு
கனவை கலையாமல் அரங்கேற்றுவோம் ..
Tuesday, July 19, 2011
காதல்
காதல்
காதல் எத்தனை சுகமானது ...
கண் வழி நுழைந்து இதயத்தில் இடம் பிடித்து
எண்ணம் செயல் அத்தனையிலும் பிரதிபலித்து...
வேறு சிந்தையே இல்லை என்ற நிலை
எந்தனை மயக்கம் எத்தனை தயக்கம் ...
இப்பிறவி எடுத்ததே உனக்காகத்தானோ
வீணை மீட்டும் நாதம் நா உலர்ந்த தேகம் ....
மடி வீழ்ந்தாலோ மயக்கம் ...
பார்த்தால் நாணம் பார்க்காவிட்டால் ஏக்கம்
குரலின் கம்பீரம் அதில் ஒலிக்கும் அக்கறை
கேலிச்சிரிப்பு அதில் ஒரு குறும்பு பார்வை .......
அப்பப்பா ..காதல் எத்தனை சுகமானது ..
காதல் எத்தனை சுகமானது ...
கண் வழி நுழைந்து இதயத்தில் இடம் பிடித்து
எண்ணம் செயல் அத்தனையிலும் பிரதிபலித்து...
வேறு சிந்தையே இல்லை என்ற நிலை
எந்தனை மயக்கம் எத்தனை தயக்கம் ...
இப்பிறவி எடுத்ததே உனக்காகத்தானோ
வீணை மீட்டும் நாதம் நா உலர்ந்த தேகம் ....
மடி வீழ்ந்தாலோ மயக்கம் ...
பார்த்தால் நாணம் பார்க்காவிட்டால் ஏக்கம்
குரலின் கம்பீரம் அதில் ஒலிக்கும் அக்கறை
கேலிச்சிரிப்பு அதில் ஒரு குறும்பு பார்வை .......
அப்பப்பா ..காதல் எத்தனை சுகமானது ..
அன்பின் மொழி
அன்பின் மொழி
நித்தமும் நினைத்திருக்க நினைவில் இனித்திருக்க
கண்களால் கதை பேச...
மௌன மொழி வியாபித்திருக்க
இனிய மொழியே...நீ... என் மௌன மொழியானாய்
உன்னை நினைத்தே நான் வாழ்கிறேன்
என் மனம் அமைதியானது எளிமையானது
தெளிவான சிந்தனைகள் அழகான கற்பனைகள்
ஆத்மார்த்த காதல் களங்கமில்லாத கவிதை
மெல்லிய மனம் அதில் ..அதிகம்
அன்பை மட்டுமே ஆதாரமாக கொண்டவள்
அன்பை மட்டுமே யாசிப்பதால் ....
கொடிய நோயான சந்தேகம் அண்டாதவள் ...
உன்னில் பாதியானவள் உன்னவள்..
உன் கண்களின் மொழி அறிந்தவள்
நித்தமும் நினைத்திருக்க நினைவில் இனித்திருக்க
கண்களால் கதை பேச...
மௌன மொழி வியாபித்திருக்க
இனிய மொழியே...நீ... என் மௌன மொழியானாய்
உன்னை நினைத்தே நான் வாழ்கிறேன்
என் மனம் அமைதியானது எளிமையானது
தெளிவான சிந்தனைகள் அழகான கற்பனைகள்
ஆத்மார்த்த காதல் களங்கமில்லாத கவிதை
மெல்லிய மனம் அதில் ..அதிகம்
அன்பை மட்டுமே ஆதாரமாக கொண்டவள்
அன்பை மட்டுமே யாசிப்பதால் ....
கொடிய நோயான சந்தேகம் அண்டாதவள் ...
உன்னில் பாதியானவள் உன்னவள்..
உன் கண்களின் மொழி அறிந்தவள்
Wednesday, June 8, 2011
நினைவுச்சிறகுகள்
என் எண்ணம் நீ என்பதால் எனக்கு எல்லாம் அழகுதான்..
என் மனதில் நீ என்பதால்
என் சந்தோசம் உன்னோடுதான்..
என் சந்தோசம் உன்னோடுதான்..
என்னை விட்டு தூரத்தில் நீ இருந்தாலும்
உன்னோடுதான் நான் எப்போதும் இருக்கிறேன்..
நினைவுகளை சிதற விட்டால்
மிஞ்சுவது சோகம் ஒன்றுதான்..
நான் ஏன் சோகப்பட வேண்டும்..
என்றும் என் நினைவுகள் உன்னை சுற்றியே..
காற்றோடு பேசுகிறேன் ஆம்
ஒருநாள் அது உன்னை வந்தடையும் என்ற நம்பிக்கையில்..
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
என் எண்ணங்களை உன்னை வைத்து அழகுபடுத்திகொள்கிறேன்..
Thursday, May 5, 2011
நிலாப்பெண்
நிலாப்பெண்
வானத்தில் தோன்றும் முழு நிலவே
நீ வளர்வதும் தேய்வதும்..
ஒருநாள் தலை மறைவாவதும்
உன் விளையாட்டா ..
நீ வரமாட்டாய் என தெரியும்
பேச மாட்டாய் என தெரியும்..
ஆனாலும் காத்திருக்கிறேன்..
உன்னுடன் அதிகமாக பேசுகிறேன்
உன் தீண்டல்களை ரசிக்கிறேன்...
என்னுடன் அதிகமாக இருப்பது நீயன்றோ...
ஒரு நாள் உன்னைப் பிரிவது
என்னுயிர் என்னைப் பிரிவது போலன்றோ..
அடி பெண்ணே உன் பிரிவு என்னை கவியாக்குகிறது..
உன் நினைவு... நிலவுடன் குலவுகிறேன்..
நீ..என்னைத் தேடும் நாளும் வாராதோ ..
Monday, April 25, 2011
அடி பெண்ணே
அடி பெண்ணே
மனதிலே ஒரு பாடல் ..
மனதிலே ஒரு பாடல் ..
நினைவிலே அதன் தாக்கம்..
என் நெஞ்சுக்குள் ஒரு சோகம்
இதழ்களில் இதழ் பூக்கும்..
தென்றலின் சிறு காற்றும்
என்னை தழுவிடும் இந்நேரம்..
உன் சுவாசம் என்னோடு
என் சுவாசமும் உன்னோடு...
காரணமின்றி அழுகை
மனதில் ஒரு அழுத்தம்....
கண்ணயரும் துளி நேரம்
கண்ணீரும் வற்றாதோ...
எண்ணங்கள் விட்டேற்றியாக
ஏனோ எதிலும் மனம் பதியவில்லை...
உன் நினைவுகளும் என்னை விட்டு பிரிவதில்லை
உன் தாக்கம் என்னுள் எப்போதும் ...
அடி பெண்ணே...
காதல் சற்றும் கண்னயராதோ...
அடி பெண்ணே...
காதல் சற்றும் கண்னயராதோ...
Monday, April 4, 2011
நானும் காத்திருக்கிறேன்
நானும் காத்திருக்கிறேன்
நானும் காத்திருக்கிறேன்
உன் வழிப்பாதையை பார்த்து..
நானும் காத்திருக்கிறேன்
உன்னிடமிருந்து வரும் சிறு மொழிக்காக..
நானும் காத்திருக்கிறேன்
உன் கனிவான பார்வைக்காக...
நானும் காத்திருக்கிறேன்
உன் இதமான அரவணைப்புக்காக..
நானும் காத்திருக்கிறேன்
எனக்காக நீயும் காத்திருப்பாய் என்று ..
நானும் காத்திருக்கிறேன்
உனக்கே உனக்காக.. உன் ஒரு சொல்லுக்காக...
நானும் காத்திருக்கிறேன்
என்னவளே நீ எங்கே...
Friday, March 25, 2011
என் தென்றலே
என் தென்றலே
என் கண்களும் உன்னைக்காண ஏங்குகிறது
என் காதுகள் உன் குரல் கேட்கத்துடிக்கிறது..
என் இதழ்கள் உன் முத்தத்திற்காக தவிக்கிறது
என் மூச்சு உன் மூச்சுக்காற்றை சுவாசிக்க விழைகிறது..
என்னுடல் உன் அருகாமைக்காக உருகுகிறது
என் உயிர் உனக்காக பிரியாமல் இருக்கிறது ..
என் சிந்தை உனக்காக கலங்காமல் மருகுகிறது
என் மனம் எப்போதும் உன்னைப்பற்றியே நினைக்கிறது ..
என் இனியவளே என்னில் நீயும் எப்போது வருவாய்
என் மனமும் குளிர உன் குளிர் புன்னகை எப்போது பூப்பாய்...
என் வாழ்க்கை உனக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது
எண்ணைக்கான எப்போது வருவாய் என் தென்றலே ..
என்னுடன் பேச விழையமாட்டயா
என்னைக்கவியாக்கி நீ காணமல் போனதேனோ ..
Sunday, March 13, 2011
கவிதையின் பிறப்பு
கவிதையின் பிறப்பு
சில்லென்ற காற்று மனதையும் உடலையும்
வருடுகிறது எண்ணங்கள் சுகமானதாக பிறக்கிறது..
அண்டை வீட்டில் தீப்பற்றி எரிகிறது
எண்ணங்களுக்கு ஏது நேரம் சிந்திக்க..
உருக்கமான கதை படிக்கிறோம் அதன் தாக்கம்
சற்று சோகமான எழுத்துக்கள் தோன்றுகிறது..
கண்ணெதிரே நடந்த சோகமான தாக்கம்
அதன் வடிகால் மனதை உருக்கும் எழுத்துக்களாக உருமாறுகிறது..
இவை அத்தனையும் எழுதுபவரின் கற்பனைகள்தாம் அன்றி
அதை அவருடனே கலந்தால் எப்படி..
அனைத்து கவிதைகளும் கற்பனையின் ஊற்றுக்கலன்றோ
அது பிறக்கும் இடத்தை பொருத்து மட்டுமே மாறுபடுகிறது..
ஒவ்வொரு கவிதையின் பிறப்பும்
வித்யாசமான சூழலில் பிறக்கும் எண்ணக் குழந்தையன்றோ...
சில்லென்ற காற்று மனதையும் உடலையும்
வருடுகிறது எண்ணங்கள் சுகமானதாக பிறக்கிறது..
அண்டை வீட்டில் தீப்பற்றி எரிகிறது
எண்ணங்களுக்கு ஏது நேரம் சிந்திக்க..
உருக்கமான கதை படிக்கிறோம் அதன் தாக்கம்
சற்று சோகமான எழுத்துக்கள் தோன்றுகிறது..
கண்ணெதிரே நடந்த சோகமான தாக்கம்
அதன் வடிகால் மனதை உருக்கும் எழுத்துக்களாக உருமாறுகிறது..
இவை அத்தனையும் எழுதுபவரின் கற்பனைகள்தாம் அன்றி
அதை அவருடனே கலந்தால் எப்படி..
அனைத்து கவிதைகளும் கற்பனையின் ஊற்றுக்கலன்றோ
அது பிறக்கும் இடத்தை பொருத்து மட்டுமே மாறுபடுகிறது..
ஒவ்வொரு கவிதையின் பிறப்பும்
வித்யாசமான சூழலில் பிறக்கும் எண்ணக் குழந்தையன்றோ...
Friday, March 4, 2011
Monday, February 21, 2011
Monday, February 7, 2011
Sunday, January 30, 2011
மையல்
மையல்
கண்ணுக்கழகாய் பட்டாடை நீ உடுத்திட்டாய்
கூந்தலிலே மல்லிகையும் சரமாட
கைவளை தான் கலகலப்பை கூட்டிடுதே..
உள்ளத்து சிரிப்போடு வீட்டில் நீ வளம் வந்தாய்
மனம் கொள்ளா மகிழ்வோடு உன் முகம் மலர்ந்திடவே
சமையலிலும் உன் கை மணம் வீசுகிறதே ..
அடிக்கடி கண்களும்தான் கண்ணாடியை பார்க்கிறது
நிலை கொள்ளா இருப்போடு கடத்திட்டாய் நேரமதை
மனம் கொண்ட காதலனும் பெண் பார்க்கும் படலமதோ..
கண்ணுக்கழகாய் பட்டாடை நீ உடுத்திட்டாய்
கூந்தலிலே மல்லிகையும் சரமாட
கைவளை தான் கலகலப்பை கூட்டிடுதே..
உள்ளத்து சிரிப்போடு வீட்டில் நீ வளம் வந்தாய்
மனம் கொள்ளா மகிழ்வோடு உன் முகம் மலர்ந்திடவே
சமையலிலும் உன் கை மணம் வீசுகிறதே ..
அடிக்கடி கண்களும்தான் கண்ணாடியை பார்க்கிறது
நிலை கொள்ளா இருப்போடு கடத்திட்டாய் நேரமதை
மனம் கொண்ட காதலனும் பெண் பார்க்கும் படலமதோ..
Friday, January 21, 2011
அன்பின் ஆழம்
அன்பின் ஆழம்
கால்கள் தன் நினைவற்று போகும் போக்கில்
போக்கிடம்தான் யார் அறிவார்
தேடுவது தெரியாத தேடல்கள்
நெஞ்சம் கனத்தாலும் கண்களில் வழியாமை..
ஏன் இந்த மாற்றம் தேடல்தான் என்ன
வாடுவது மனமா மனதின் வழி நினைவா ...
காயப்பட்ட மனதிற்கு மருந்துதான் என்ன
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்...
உன்னை நினைத்து உன் நினைவை நினைத்து
நித்தம் நிதம் உயிர் இழந்து..
இருப்பது உடல் மட்டுமே ..உன்னாலும்
இருப்பது உடல் மட்டுமே ..உன்னாலும்
உயிர்ப்பிக்க முடியாத தூரம் போய்விட்டேன்..
உயிரற்ற உடலை நேசிக்க நட்பு வட்டம்
அதை ஒரு இயந்திரத்தை போல சமர்ப்பித்துவிட்டேன்..
இன்னமும் கண்கள் உன்னை தேடுவதும்
காதுகள் உன் குரல் கேட்க துடிப்பதும்..
வியப்பான ஒன்றுதான் ..
Subscribe to:
Comments (Atom)


















