Saturday, January 21, 2012

உனக்கானவள்

உனக்கானவள்


நீ மலரென்றால்...
நான் வாசமாகிப்போகின்றேன்..

நீ வானமென்றால்...
நான்  காற்றாகிப்போகின்றேன்..

நீ மழையென்றால்..
நான் மேகமாகிப்போகின்றேன்..

நீ கவிதைஎன்றால்..
நான் வரிகலாகிப்போகின்றேன்..

நீ கதையென்றால்..
நான் கருவாகிப்போகின்றேன்..

நீ......
நினைக்கும் அனைத்தும் நானாகிப்போனாலும்..

நீ.....
மலருக்கு மலர்தாவும் வண்டாகிப்போனதேனோ ???

Friday, January 20, 2012

எங்கே நீ

எங்கே நீ

மதிய வெயில் நேரத்தில் சிறு காற்றாய் நீ வந்தாய்
கண்மூடி சிலிர்க்கும் முன் கானல் நீராய் மறைந்ததேன்...

தாகம் தீர்க்கும் குளிர் நீராய் நீ வந்தாய்
நா வறட்சி தீருமுன் எங்கே போனாய் நீ..

பசி நேர அமுதாய் நீ வந்தாய்
கையிலெடுக்குமுன் ஏன் அதை பறித்தாய்..

உன் நினைவில் வாடும் போது ஓடி வந்த நீ
கண்திறந்து பார்த்தல் அது கனவென்று எங்கே  போனாய்..

சின்ன சிணுங்கலுடன் சிரிக்கும்போது எனை பார்த்த நீ
நிரந்தரமாக என் சிரிப்பை எங்கே மறைத்தாய்...

அன்பால்  என் மனதில் இடம் பிடித்த நீ
அன்புக்கு ஏங்கும் எனைவிட்டு எங்கே போனாய் இப்போது ..

என்னை இழக்கும் உன்னை நான் என்ன சொல்ல
உன் சந்தோசம் இதுவானால் தடையென்ன சொல்ல..





Sunday, December 25, 2011

என் காதல்

என் காதல்

கனவுகளின் சாட்சிகளை சொல்லவா????

இல்லை ....
கவிதைகளின் வரிகளை சொல்லவா????

இல்லை ....
மௌனத்தின் வாசலை சொல்லவா????

இல்லை .....
என் தவிப்புகளை சொல்லவா????

இதில் ....

எதைச்சொல்லி புரிய வைப்பேன்.......
என் காதலை !!!!!

Thursday, December 22, 2011

மாற்றம்

மாற்றம்

என் அருகில் நீ இல்லாதது மிகவும் வெறுமை
ஏனிந்த மாற்றம் என்ன செய்தாய் நீ..

உன் கனிவான பேச்சு சிலையாகிபோகிறேன் நான்
உன் இதழ் அமுதம் இன்னும் இன்னும் ......

ஏனிந்த மாற்றம் உன் நினைவில் நான்
மனதில் மாற்றம் இதழில் சிரிப்பு

கண்களில் மயக்கம் காதலின் நினைவு
உன் நெஞ்சில் என் விடியல்...

உன் அணைப்பு மீண்டும் கருவறை
உன் நினைவு என்னை வாட்டுகிறது..

ஏனடி பெண்ணே நீ
என்னதான் செய்தாய் என்னை .......

 

Tuesday, December 13, 2011

அன்பின் அடைக்கலம்

அன்பின் அடைக்கலம்


அதிகாலை விழித்தெழல் உன் மார்பில்
கலைந்த என் கூந்தலை உன் கரங்களும்...

சற்றே ஒதுக்கிவிட ....
கண் இமை திறந்தால் நாணம் வரும் விலக நேரிடும் ..
அன்பே நான் கண்  விழிக்க மாட்டேன்

பூ போன்ற பொக்கிசமான  வாழ்க்கை
அதிகாரம் வேண்டாம் ஆணவம் வேண்டாம்
அன்பால் ஆட்சி செய்வோம் நமக்குள்
மாட  மாளிகை வேண்டாம்... அரிதான நகைகள் வேண்டாம்
அறுசுவை விருந்தும் வேண்டாம்...

அன்பான உன் கரங்களின் தீண்டல் போதும்
கனிவான உன் பார்வை.... அது சொல்லும் நேசம் போதும்
உன் எண்ணம் என்  செயலாக...உணதாளுகையின் கூட்டுக்குள் அடைக்கலமாக....

.

Thursday, September 29, 2011

எனக்கானவன் நீ

எனக்கானவன் நீ 

வாசமான பூங்காற்று நீ
உன் அணைப்பில் எப்போதும் நான் துயில் கொள்கிறேன்..

வசந்தமான நினைவுகள் நீ
உன் நினைவில் எப்போதும் நான் எனை மறக்கிறேன் ..

மாசற்ற பேச்சாளன் நீ
உன் பேச்சின் அழகில் எப்போதும் நான் வழிநடக்கிறேன்..

கம்பீரமான அழகு நீ
உன் அழகின் மயக்கம் எபோதும் நான் உன் மயக்கத்தில்...

தீட்சண்யமான பார்வை நீ
உன் பார்வையின் கூர்மையில் நாணி தலைகுனிகிறேன்..

எனக்கானவன் நீ 
இந்த நினைவு என்னை கவியாக்குகிறது...

குட்டி தேவதை

குட்டி  தேவதை

அழகு நிலா உற்சவத்தில் சிறிய நட்சத்திரகூட்டம் 
வானமெங்கும் சிதறிய நட்சத்திர தோரணம்..
 
வெண் மேகத்தின்  சந்தோசச்சாரல்கள்
எதற்காக இத்தனை கொண்டாட்டம்...

அனைவரும் வியந்து பார்க்க
வானத்தில் நடந்தது ஓர் அதிசய நிகழ்வு..

முழு நிலவின் ஒளி உலகெங்கும் வியாபிக்க
புதிதாக பிறந்த குட்டி  குழந்தையின் சிரிப்பு..

தன் மெல்லிய  சிணுங்களில் சின்ன கைகளை அசைத்து
கால்களை உதைத்து தன் செப்பு வாய் சிரிப்பால்...

மயக்கும் தேவதையின் சாயலுடன் என்
பவித்ரமானவளின் குழந்தையன்றோ அது!!!!!