Saturday, January 21, 2012

உனக்கானவள்

உனக்கானவள்


நீ மலரென்றால்...
நான் வாசமாகிப்போகின்றேன்..

நீ வானமென்றால்...
நான்  காற்றாகிப்போகின்றேன்..

நீ மழையென்றால்..
நான் மேகமாகிப்போகின்றேன்..

நீ கவிதைஎன்றால்..
நான் வரிகலாகிப்போகின்றேன்..

நீ கதையென்றால்..
நான் கருவாகிப்போகின்றேன்..

நீ......
நினைக்கும் அனைத்தும் நானாகிப்போனாலும்..

நீ.....
மலருக்கு மலர்தாவும் வண்டாகிப்போனதேனோ ???

Friday, January 20, 2012

எங்கே நீ

எங்கே நீ

மதிய வெயில் நேரத்தில் சிறு காற்றாய் நீ வந்தாய்
கண்மூடி சிலிர்க்கும் முன் கானல் நீராய் மறைந்ததேன்...

தாகம் தீர்க்கும் குளிர் நீராய் நீ வந்தாய்
நா வறட்சி தீருமுன் எங்கே போனாய் நீ..

பசி நேர அமுதாய் நீ வந்தாய்
கையிலெடுக்குமுன் ஏன் அதை பறித்தாய்..

உன் நினைவில் வாடும் போது ஓடி வந்த நீ
கண்திறந்து பார்த்தல் அது கனவென்று எங்கே  போனாய்..

சின்ன சிணுங்கலுடன் சிரிக்கும்போது எனை பார்த்த நீ
நிரந்தரமாக என் சிரிப்பை எங்கே மறைத்தாய்...

அன்பால்  என் மனதில் இடம் பிடித்த நீ
அன்புக்கு ஏங்கும் எனைவிட்டு எங்கே போனாய் இப்போது ..

என்னை இழக்கும் உன்னை நான் என்ன சொல்ல
உன் சந்தோசம் இதுவானால் தடையென்ன சொல்ல..