Thursday, September 29, 2011

எனக்கானவன் நீ

எனக்கானவன் நீ 

வாசமான பூங்காற்று நீ
உன் அணைப்பில் எப்போதும் நான் துயில் கொள்கிறேன்..

வசந்தமான நினைவுகள் நீ
உன் நினைவில் எப்போதும் நான் எனை மறக்கிறேன் ..

மாசற்ற பேச்சாளன் நீ
உன் பேச்சின் அழகில் எப்போதும் நான் வழிநடக்கிறேன்..

கம்பீரமான அழகு நீ
உன் அழகின் மயக்கம் எபோதும் நான் உன் மயக்கத்தில்...

தீட்சண்யமான பார்வை நீ
உன் பார்வையின் கூர்மையில் நாணி தலைகுனிகிறேன்..

எனக்கானவன் நீ 
இந்த நினைவு என்னை கவியாக்குகிறது...

குட்டி தேவதை

குட்டி  தேவதை

அழகு நிலா உற்சவத்தில் சிறிய நட்சத்திரகூட்டம் 
வானமெங்கும் சிதறிய நட்சத்திர தோரணம்..
 
வெண் மேகத்தின்  சந்தோசச்சாரல்கள்
எதற்காக இத்தனை கொண்டாட்டம்...

அனைவரும் வியந்து பார்க்க
வானத்தில் நடந்தது ஓர் அதிசய நிகழ்வு..

முழு நிலவின் ஒளி உலகெங்கும் வியாபிக்க
புதிதாக பிறந்த குட்டி  குழந்தையின் சிரிப்பு..

தன் மெல்லிய  சிணுங்களில் சின்ன கைகளை அசைத்து
கால்களை உதைத்து தன் செப்பு வாய் சிரிப்பால்...

மயக்கும் தேவதையின் சாயலுடன் என்
பவித்ரமானவளின் குழந்தையன்றோ அது!!!!!

Sunday, September 25, 2011

கனவின் எதிரொலி

கனவின் எதிரொலி

சுகமான நித்திரை அதில் வரும் கனவு
விடிந்தால் மடிந்துவிடும் ..

நிச்சலனமான சிந்தனை அதில் வரும் நினைவுகள்
கண்ணெதிரே  தோன்றும் காட்சிகள்
அத்தனையும் மாயையோ ..

மேகம் திரண்டு வரும்போது போடும்  தூறல்
சற்று நேர மகிழ்ச்சிதானே ..
மழை மேகங்களே எனக்காக மறுபடி வாருங்கள்

காத்திருப்பு தேயும் போது காலங்கள் மாறும்
ஆனால் எப்போதும் மாறாதது
மனதில் தோன்றும் அன்புக்காதல்

கடமை அனைவருக்கும் உண்டு
அதனுடன் வாழ்வது வாழ்க்கை ..

கடல் அலை ஓய்ந்த பின் குளிக்க நினைப்பது
எப்படி சாத்தியமாகும் ..

வாழும் காலமோ சிறிது
அதனை முழுமையாக வாழவேண்டும்...

சுகமான நித்திரை அதில் வரும் கனவு
கனவை கலையாமல் அரங்கேற்றுவோம் ..