காதல்
காதல் எத்தனை சுகமானது ...
கண் வழி நுழைந்து இதயத்தில் இடம் பிடித்து
எண்ணம் செயல் அத்தனையிலும் பிரதிபலித்து...
வேறு சிந்தையே இல்லை என்ற நிலை
எந்தனை மயக்கம் எத்தனை தயக்கம் ...
இப்பிறவி எடுத்ததே உனக்காகத்தானோ
வீணை மீட்டும் நாதம் நா உலர்ந்த தேகம் ....
மடி வீழ்ந்தாலோ மயக்கம் ...
பார்த்தால் நாணம் பார்க்காவிட்டால் ஏக்கம்
குரலின் கம்பீரம் அதில் ஒலிக்கும் அக்கறை
கேலிச்சிரிப்பு அதில் ஒரு குறும்பு பார்வை .......
அப்பப்பா ..காதல் எத்தனை சுகமானது ..
Tuesday, July 19, 2011
அன்பின் மொழி
அன்பின் மொழி
நித்தமும் நினைத்திருக்க நினைவில் இனித்திருக்க
கண்களால் கதை பேச...
மௌன மொழி வியாபித்திருக்க
இனிய மொழியே...நீ... என் மௌன மொழியானாய்
உன்னை நினைத்தே நான் வாழ்கிறேன்
என் மனம் அமைதியானது எளிமையானது
தெளிவான சிந்தனைகள் அழகான கற்பனைகள்
ஆத்மார்த்த காதல் களங்கமில்லாத கவிதை
மெல்லிய மனம் அதில் ..அதிகம்
அன்பை மட்டுமே ஆதாரமாக கொண்டவள்
அன்பை மட்டுமே யாசிப்பதால் ....
கொடிய நோயான சந்தேகம் அண்டாதவள் ...
உன்னில் பாதியானவள் உன்னவள்..
உன் கண்களின் மொழி அறிந்தவள்
நித்தமும் நினைத்திருக்க நினைவில் இனித்திருக்க
கண்களால் கதை பேச...
மௌன மொழி வியாபித்திருக்க
இனிய மொழியே...நீ... என் மௌன மொழியானாய்
உன்னை நினைத்தே நான் வாழ்கிறேன்
என் மனம் அமைதியானது எளிமையானது
தெளிவான சிந்தனைகள் அழகான கற்பனைகள்
ஆத்மார்த்த காதல் களங்கமில்லாத கவிதை
மெல்லிய மனம் அதில் ..அதிகம்
அன்பை மட்டுமே ஆதாரமாக கொண்டவள்
அன்பை மட்டுமே யாசிப்பதால் ....
கொடிய நோயான சந்தேகம் அண்டாதவள் ...
உன்னில் பாதியானவள் உன்னவள்..
உன் கண்களின் மொழி அறிந்தவள்
Subscribe to:
Comments (Atom)

