Friday, March 25, 2011

என் தென்றலே

என் தென்றலே 
 
என் கண்களும் உன்னைக்காண ஏங்குகிறது
என் காதுகள் உன் குரல் கேட்கத்துடிக்கிறது..
 

என் இதழ்கள் உன் முத்தத்திற்காக  தவிக்கிறது
என் மூச்சு உன் மூச்சுக்காற்றை சுவாசிக்க விழைகிறது..

என்னுடல் உன் அருகாமைக்காக உருகுகிறது 
என் உயிர் உனக்காக பிரியாமல் இருக்கிறது ..

என் சிந்தை உனக்காக கலங்காமல் மருகுகிறது 
என் மனம்  எப்போதும் உன்னைப்பற்றியே நினைக்கிறது ..

என் இனியவளே என்னில் நீயும் எப்போது வருவாய்
என் மனமும் குளிர உன் குளிர் புன்னகை எப்போது பூப்பாய்...

என் வாழ்க்கை உனக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது
எண்ணைக்கான  எப்போது வருவாய் என் தென்றலே  ..

என்னுடன் பேச விழையமாட்டயா
என்னைக்கவியாக்கி நீ காணமல் போனதேனோ ..
 
 
 

Sunday, March 13, 2011

கவிதையின் பிறப்பு

கவிதையின் பிறப்பு

சில்லென்ற காற்று மனதையும் உடலையும்
வருடுகிறது எண்ணங்கள் சுகமானதாக பிறக்கிறது..

அண்டை வீட்டில் தீப்பற்றி எரிகிறது
எண்ணங்களுக்கு ஏது நேரம் சிந்திக்க..

உருக்கமான கதை படிக்கிறோம் அதன் தாக்கம்
சற்று சோகமான எழுத்துக்கள் தோன்றுகிறது..

கண்ணெதிரே நடந்த சோகமான தாக்கம்
அதன் வடிகால் மனதை உருக்கும் எழுத்துக்களாக உருமாறுகிறது..

இவை அத்தனையும் எழுதுபவரின் கற்பனைகள்தாம் அன்றி
அதை அவருடனே கலந்தால் எப்படி..

அனைத்து கவிதைகளும் கற்பனையின் ஊற்றுக்கலன்றோ
அது பிறக்கும் இடத்தை பொருத்து மட்டுமே மாறுபடுகிறது..

ஒவ்வொரு கவிதையின் பிறப்பும்
வித்யாசமான சூழலில் பிறக்கும் எண்ணக் குழந்தையன்றோ...

Friday, March 4, 2011

எண்ணச்சுமைகள்

எண்ணச்சுமைகள்

 
மனதின் ஏக்கம் அதிகமாகும்போது 
நினைவுகள் சுமையாகிறது ..

ஏனோ இதன் தாக்கம் புரியவில்லை
சுகமா சோகமா இதன் முடிவு..

என்றும் நிலைக்க இதன் தாக்கம்
கனவுகளாகவே இருக்கட்டும்..

இனிக்கும் பொழுதுகள் இன்பமுற்றிருக்க
இல்லாத பொழுதுகள் ஏக்கத்துடன் கழிய ..

எத்தனை சொல்வது என்ன சொல்வது
இது எண்ணச்சுமைகள்..