Monday, February 21, 2011

நினைவு

நினைவு

நெஞ்சின் அலை அடிக்க 
உன் நினைவுகள் வந்து போகிறது..

சில சமயம் சுனாமியின் தாக்கம் 
பல சமயம் அமைதியின் சுழல்..

நடுவில் சிக்கித்தவிக்கும் மனதிற்க்கு 
ஆறுதல் தான் எதுவோ ..

என் கண்ணீரும்தான் வற்றிவிட்டது
உன் நினைவு ஊற்றுக்களாகிறது..

Monday, February 7, 2011

எனக்கு நீ

எனக்கு  நீ

உன் நினைவில் என் நினைவு
உன் பிம்பத்தில் என் கனவு..

உன் சிரிப்பில் என் மகிழ்ச்சி
உன் சோகத்தில் என் கண்ணீர்..

உன் காதலில் என்  காதல்
உன் வார்த்தையில் என் மௌனம்..

உன் எண்ணம் என் செயல்
உன் தேவை என் தேடல்..

உனக்கான எல்லாமாக நான்..
எனக்கு  நீ மட்டுமே தான்..