Sunday, January 30, 2011

மையல்

மையல்

கண்ணுக்கழகாய் பட்டாடை நீ உடுத்திட்டாய்
கூந்தலிலே மல்லிகையும் சரமாட
கைவளை தான் கலகலப்பை கூட்டிடுதே..

உள்ளத்து சிரிப்போடு வீட்டில் நீ வளம் வந்தாய்
மனம் கொள்ளா மகிழ்வோடு உன் முகம் மலர்ந்திடவே
சமையலிலும் உன் கை மணம் வீசுகிறதே ..

அடிக்கடி கண்களும்தான் கண்ணாடியை பார்க்கிறது
நிலை கொள்ளா இருப்போடு கடத்திட்டாய் நேரமதை
மனம் கொண்ட காதலனும் பெண் பார்க்கும் படலமதோ..

Friday, January 21, 2011

அன்பின் ஆழம்


அன்பின் ஆழம் 

கால்கள் தன் நினைவற்று போகும் போக்கில்  
போக்கிடம்தான் யார் அறிவார்

தேடுவது தெரியாத தேடல்கள் 
நெஞ்சம் கனத்தாலும் கண்களில் வழியாமை..

ஏன் இந்த மாற்றம் தேடல்தான் என்ன 
வாடுவது மனமா மனதின் வழி நினைவா ...

காயப்பட்ட மனதிற்கு மருந்துதான் என்ன
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்...

உன்னை நினைத்து உன் நினைவை நினைத்து
நித்தம் நிதம் உயிர் இழந்து..

இருப்பது உடல் மட்டுமே ..உன்னாலும்
உயிர்ப்பிக்க முடியாத தூரம் போய்விட்டேன்..

உயிரற்ற உடலை நேசிக்க நட்பு வட்டம்
அதை ஒரு இயந்திரத்தை போல சமர்ப்பித்துவிட்டேன்..

இன்னமும் கண்கள் உன்னை தேடுவதும் 
காதுகள் உன் குரல் கேட்க துடிப்பதும்.. 
வியப்பான ஒன்றுதான் ..