Wednesday, June 8, 2011

நினைவுச்சிறகுகள்

நினைவுச்சிறகுகள்

எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
என் எண்ணம் நீ என்பதால் எனக்கு எல்லாம் அழகுதான்..

என் மனதில் நீ என்பதால்
என் சந்தோசம் உன்னோடுதான்..

என்னை விட்டு தூரத்தில் நீ இருந்தாலும்
உன்னோடுதான் நான் எப்போதும் இருக்கிறேன்..

நினைவுகளை சிதற விட்டால்
மிஞ்சுவது சோகம் ஒன்றுதான்..

நான் ஏன் சோகப்பட வேண்டும்..
என்றும் என் நினைவுகள்  உன்னை சுற்றியே..

காற்றோடு பேசுகிறேன் ஆம்
ஒருநாள் அது உன்னை வந்தடையும் என்ற நம்பிக்கையில்..

எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
என் எண்ணங்களை உன்னை வைத்து அழகுபடுத்திகொள்கிறேன்..