நிலாப்பெண்
வானத்தில் தோன்றும் முழு நிலவே
நீ வளர்வதும் தேய்வதும்..
ஒருநாள் தலை மறைவாவதும்
உன் விளையாட்டா ..
நீ வரமாட்டாய் என தெரியும்
பேச மாட்டாய் என தெரியும்..
ஆனாலும் காத்திருக்கிறேன்..
உன்னுடன் அதிகமாக பேசுகிறேன்
உன் தீண்டல்களை ரசிக்கிறேன்...
என்னுடன் அதிகமாக இருப்பது நீயன்றோ...
ஒரு நாள் உன்னைப் பிரிவது
என்னுயிர் என்னைப் பிரிவது போலன்றோ..
அடி பெண்ணே உன் பிரிவு என்னை கவியாக்குகிறது..
உன் நினைவு... நிலவுடன் குலவுகிறேன்..
நீ..என்னைத் தேடும் நாளும் வாராதோ ..
