அடி பெண்ணே
மனதிலே ஒரு பாடல் ..
மனதிலே ஒரு பாடல் ..
நினைவிலே அதன் தாக்கம்..
என் நெஞ்சுக்குள் ஒரு சோகம்
இதழ்களில் இதழ் பூக்கும்..
தென்றலின் சிறு காற்றும்
என்னை தழுவிடும் இந்நேரம்..
உன் சுவாசம் என்னோடு
என் சுவாசமும் உன்னோடு...
காரணமின்றி அழுகை
மனதில் ஒரு அழுத்தம்....
கண்ணயரும் துளி நேரம்
கண்ணீரும் வற்றாதோ...
எண்ணங்கள் விட்டேற்றியாக
ஏனோ எதிலும் மனம் பதியவில்லை...
உன் நினைவுகளும் என்னை விட்டு பிரிவதில்லை
உன் தாக்கம் என்னுள் எப்போதும் ...
அடி பெண்ணே...
காதல் சற்றும் கண்னயராதோ...
அடி பெண்ணே...
காதல் சற்றும் கண்னயராதோ...

